ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சந்தர்ப்பவாதிகள் என அக்கட்சியின் தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


பஞ்சாப் மாநிலத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிப் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை காங்கிரஸ் அரசு வஞ்சித்துவிட்டது.
சிலர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறி விட்டனர். இதனால் கட்சி அழிந்துவிட்டது என்று எதிர்கட்சிகள் கூறுவதை பொருட்படுத்த வேண்டியதில்லை.
கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்றார்.