புதுடெல்லி:

வந்தே மாதரம் சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்தார்.


திங்களன்று மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி, எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

எதிர்கட்சிகள் எல்லாம் வில்லனாக மாறி, பிரதமர் மோடியை கதாநாயகனாக்கிவிட்டதாகக் கூறிய அவர், ,ராமாயணத்தோடு பிரதமர் மோடியை இணைத்து பெருமைபட பேசினார்.

பாகிஸ்தான் வாழ்க, அப்சல் குரு வாழ்க என்போரும், வந்தே மாதரம் சொல்ல மறுப்போரும் இந்தியாவில் வாழ உரிமை இல்லை என்ற அவர், நாட்டை துண்டாட நினைப்பதை சகித்துக் கொள்ள முடியாது என்றார்.

பாலக்கோடு விமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது, தாயிடம் டிஎன்ஏ ஆதாரம் கேட்பதைப் போன்றது என்றும் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி தனது உரையை இந்தி, சமஸ்கிருதம், ஒடியா, வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் மாறி மாறி நிகழ்த்தினார்.