‘’விவசாயிகள் போராட்டத்தை தூண்டுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும்’’ கங்கனா வலியுறுத்தல்

சர்ச்சை கருத்துக்களைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வழக்குகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார், இந்தி நடிகை கங்கனா ரணாவத்.

மும்பையில் சில நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் அவர் மீது வழக்குகள் உள்ளன.

அவ்வப்போது, போலீஸ் நிலையங்களில் அவர் ஆஜராகி வருகிறார்.

டெல்லியில்  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டித்து கங்கனா ரணாவத் ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறார்.

குடியரசு தினமான நேற்று டெல்லியில் நடந்த  விவசாயிகள் ’’டிராக்டர்’’  பேரணியில் கலவரம் ஏற்பட்டுள்ளது குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்., .

கங்கனா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தியில் பேசி, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை தேசத்தின் நற்பெயரைக் குறைத்து விட்டது. விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போரைச் சிறையில் அடைக்க வேண்டும்.. செய்த தவற்றுக்கு அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ’’ என கங்கனா தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.