வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:
வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்னர் மெல்ல குறைந்த வந்த நிலையில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்த வருபவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அறிவித்து இருந்தது.

தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வியாபார விஷயமாக தமிழகத்திரகு வந்து 72 மணி நேரம் தங்குபவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி தவிர அனைத்து சர்வதேச பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு இபாஸ் கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.