Random image

கிருஷ்ணசாகர் அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறப்பு

பெங்களூரு:

கர்நாடகாவின் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக 124 அடி உயரமுள்ள கிருஷ்ணசாகர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது. நாளை காலைக்குள் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. நீர்மட்டமும் 121 அடி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நாளை காலைக்குள் 10,000 கனஅடி நீர் காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது.