Random image

குஜராத்: புல்லட் ரெயில் திட்டத்துக்கு ஆயிரம் விவசாயிகள் எதிர்ப்பு…..உயர்நீதிமன்றத்தில் முறையீடு

காந்திநகர்:

மும்பை-ஆமதாபாத் இடையிலா புல்லட் ரெயில் திட்டத்திற்கு ஆயிரம் விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சப்போட்டா, மாம்பழம் விளையவைக்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் புல்லட் ரெயில் பாதை செல்லும் வழியில் உள்ள விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரம் விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்பதால், வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன.