மனிதன் தன்னை அறிதல் மட்டுமின்றி பிறரையும் நேசித்து அவனோடு அன்பு பாராட்டி, உதவுவதையே மனித நேயம் என்று கூறுகிறோம். மனிதர்களிடையே மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்தி உள்ளது இங்கிலாந்தில் நடைபெற்ற  நிகழ்வு.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மனித நேயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக,  அரிய வகை புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான சிறுவனை காப்பாற்ற, ஸ்டெம்செல் தானம் செய்வதற்காக 5ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து, கொட்டும் மழையிலும் காந்திருந்த நிகழ்வு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த  ஆஸ்கர் சஷெல்பை-லீ (Oscar Saxelby-Lee) என்ற 5வயது  சிறுவனுக்கு அரியவகை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லுக்கிமியா வகை புற்றுநோய் என அறியப்பட்ட நிலையில், அந்த சிறுவனை ஸ்டெம்செல் மூலம் மட்டுமே  குணமாக்க முடியும் என தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த சிறுவனுக்கு புதிய ஸ்டெம்செல் பொருத்தி, மரணத்தில் இருந்து காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

புற்றுநோய் நோய் பாதிப்பு காரணமாக, அவனது உடம்பில் ஸ்டெம் செல் அழிந்து வந்த நிலை யில்,  3 மாதத்திற்குள் புதிய ஸ்டெம்செல் அந்த சிறுவனுக்கு பொருத்தினால், அவனை காப் பாற்றிவிடலாம் என அறிந்து, சிறுவனின் ஸ்டெம்செல் வகையை சேர்ந்த புதிய ஸ்டெம்செல் தானம் கேட்டு கோரிக்கை விடுத்தனர்.

அது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தானம் குறித்த செய்தி இங்கிலாந்தில்  வைரலானது. இதையறிந்த ஏராளமான மனிதாபிமானிகள், குறிப்பிட்ட நாளில்,  ஸ்டெம்செல் தானம் கொடுக்க அறிவிக்கப்பட்ட இடத்தை நோக்கி சாரை சாரயாக வரத்தொடங்கினர்.

ஸ்டெம்செல் தானம் கொடுக்க குவிந்த மனிதாபிமானிகள்

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில், திடீரென மழையும் பெய்யத் தொடங்கியது. ஆனாலும், மழையை பொருட்படுத்தாது சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஸ்டெம்செல் தானம் செய்ய  முன்வந்து வரிசையில் நின்றது, மருத்துவர்கள் மட்டு மல்லாது, ஆஸ்கரின் குடும்பத்தினருக்கும் பெரும் ஆச்சரியத்தை மட்டுமல்லாது சந்தோஷத்தை யும் ஏற்படுத்தியது.

இதுபோன்ற சம்பவங்கள் இங்கிலாந்து வரலாற்றில் இதுவரை நடைபெறவில்லை என்று, அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த மனிதாபிமான நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த சிறுவன் ஆஸ்கரின் தந்தை, தனது மகனை இந்த கொடி  நோய் தாக்கியது குறித்து எங்களால்  வருத்தத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் காப்பாற்றப்படுவானா என்பதில் சந்தேகம் தோன்றியது.  நாங்களும் சோர்ந்து போனோம்… ஆனாலும், ஆஸ்கரின் புன்னகை எங்களுக்கு தெம்பை அளித்து வந்தது. தற்போது அவனுக்காக ஆயிரக்கணக்கான போர் கூடியது எங்களுக்கு நம்பிக்கையையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்.

மனித நேயம் இன்னும் மரணித்துவிட வில்லை என்பது இந்த நிகழ்வு ஒன்று சாட்சி…