சிட்னி

ஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள முர்ரே டர்லிங் நதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முர்ரே டார்லிங் நதி ஓடுகிறது.  அந்த  நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் போதிலும் இந்த மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.   இந்த வறட்சி காரணமாக 1472  கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த முர்ரே டார்லிங் நதியில் தண்ணீர் அளவு குறைந்து வருகிறது.

இந்த குறைவான தண்ணீரால் இங்கு ஆக்சிஜன் அளவு பெருமளவில் குறைந்துள்ளது.   அத்துடன் நீர் அளவு குறைந்ததால் நதியில் கடும் மாசு உண்டாகி இருக்கிறது.  இதனால் கடந்த இரு வாரங்களாக இந்த நதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

இந்த நதியில் உள்ள முர்ரே கோல்ட், கோல்டன் பெர்ச், சில்வெர் பெர்ச், உள்ளிட்ட பல வகை மீன்கள் தற்போது இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் நீர் மாசு காரணமாக மரணம் அடைந்துள்ளன.    ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் இந்த ஆற்றில் மேலும் பல மீன்கள் இறக்கலாம் என கவலை தெரிவித்துள்ளனர்.