சென்னையில் 9வது நாளாக ஆயிரத்தை தாண்டிய தொற்று… மொத்த பாதிப்பு 27,398 ஆக உயர்வு

சென்னை:

மிழகத்தில் இன்று மேலும் 1875 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 1407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

bty

தொடர்ந்து 9வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் 13,310 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 13,808 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.  மேலும், சென்னையில் மட்டும்  279 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து உச்சம் அடைந்து வரும் கொரோனா தொற்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி