சில ஆயிரம் கி.மீ. பேருந்து  பயணம்… மத்திய அரசை வறுக்கும் பினராயி …

வெளிமாநிலங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பேருந்துகளில் தான், அவர்களை அனுப்ப வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளது.

இந்த நிபந்தனையைக் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் ஏற்க மறுத்து விட்டார்

‘’ கேரளாவில் சுமார் 20 ஆயிரம் முகாம்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மே.வங்காளம்,அசாம், ஒடிசா, பீகார், உ.பி. போன்ற தொலைதூர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அவ்வளவு தொலைவுக்கு அவர்களை எப்படி பஸ்களில் அனுப்ப முடியும்? பல மாநிலங்களைக் கடந்து அவர்கள் செல்ல வேண்டும். உடம்பு வலிக்காதா? சிரமமாக இருக்காதா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ள பினராயி விஜயன்,’’ரயில்கள் தான் அவர்களுக்கு சவுகரியமாக  இருக்கும்’’ என்றார்.

‘’ இங்கே தங்கி உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அனுப்ப இடைநில்லா( நான் ஸ்டாப்) தனி ரயில்களை இயக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு, கேரள அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது’’ என்றும் பினராயி தெரிவித்துள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்