சென்னையில் 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு… மாவட்ட வாரியாக விவரம்… பீதியில் சென்னை மக்கள்

சென்னை:

சென்னையில் இன்று 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 25,937  ஆக உயர்ந்துள்ளது.  இதனால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தை  கொரோனா தொற்று  ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.  இன்று புதிதாக 1,927 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் மொத்த எண்ணிக்கை 36,841ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து 8 ஆம் நாளாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்து உள்ளது.  இன்றும்  1,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னையில் மட்டும்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,   13,085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 12,591 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சென்னையில் இதுவரை  260 பேர் உயிரிழந்து உள்ளது. இது சென்னை வாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் 167பேருக்கும் திண்டுக்கல்லில் 185 பேருக்கும் திருநெல்வேலியில் 407 பேருக்கும், ஈரோட்டில் 74, திருச்சியில் 132 பேருக்கும், நாமக்கல் 89 மற்றும் ராணிப்பேட்டை 164, செங்கல்பட்டு 2,328, மதுரை 343, கரூர் 87, தேனி 134, மற்றும் திருவள்ளூரில் 1,581 பேருக்கு, தூத்துக்குடியில் 389, விழுப்புரத்தில் 392பேருக்கும், கிருஷ்ணகிரியில் 38பேருக்கும், தருமபுரியில் 23பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூரில் 114, கடலூர் 498, மற்றும் சேலத்தில் 213, திருவாரூரில் 83, நாகப்பட்டினம் 92, திருப்பத்தூர் 42, கன்னியாகுமரியில் 105 மற்றும் காஞ்சிபுரத்தில் 600பேருக்கும், சிவகங்கை 44மற்றும் வேலூரில் 122 பேருக்கும், நீலகிரியில் 14பேருக்கும், தென்காசி 106, கள்ளக்குறிச்சியில் 299 பேருக்கும், ராமநாதபுரத்தில் 126 பேருக்கும், அரியலூர் 384 மற்றும் பெரம்பலூரில் 144பேருக்கும், புதுக்கோட்டையில் 45 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 506பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.