ம்பே, வனாவ்டோ

னாவ்டோவில் எரிமலை பொங்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

நியூஜிலாந்துக்கு வடக்கில் வனாவ்டோ பகுதியில் உள்ள ஒரு தீவு அம்பே.  இங்குள்ள எரிமலை விரைவில் பொங்கும் என அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  மொனாரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை இந்த மாத ஆரம்பத்தில் லேசாக சாம்பல் மற்றும் புகையை வெளியிட்டது.  கடந்த ஒரு வாரமாக சாம்பல் மற்றும் புகை வெளிவருவது மிகவும் அதிகரித்துள்ளதால் அந்த நாட்டின் தேசிய பேரிடர் மையம் அங்குள்ள மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகிறது.

சுமார் 6000 பேர் இதுவரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.  15 அவசரகால தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மக்களுக்கு அளிக்கப்படும் உணவு, மற்றும் குடிநீரிலும் எரிமலை சாம்பல் பறந்து வந்து கலந்து விடுவதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2005ஆம் வருடம் இந்த எரிமலை பொங்கியது. மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து அபாயம் தலை தூக்கி உள்ளது.

வானாவ்டோ பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் ஏழை மக்கள். அங்கு விவசாயம் செய்து பிழைத்து வருபவர்கள்.  இந்த எரிமலை பொங்குவதால் அவர்களுடைய பயிர்கள் பாழாகும் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.  வனாவ்டோ பகுதி 80 தீவுகளைக் கொண்டது.  இதில் சுமார் 2,60,000 மக்கள் வசித்து வருகின்றனர்.