சர்வதேச அளவில் பாலின சமத்துவம் நிலவும் நாடுகள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடந்தது. ஆண், பெண் கல்வி வாய்ப்பு, சுகாதாரம், பொருளாதார வசதி வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில் ஆண் பெண் சமத்துவத்தில் முதலிடத்தில் ஐஸ்லாந்து நாடு உள்ளது.
iceland
ஆனால் கடந்த திங்களன்று அந்நாட்டின் தலைநகர் ரேய்க்ஜாவிக் நகரில் ஒரு மைதானத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி ஆண்களுக்கு நிகராக வேலை செய்யும் எங்களுக்கு ஆண்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
அவர்களது போராட்டம் சற்று சுவாரசியமானது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆண்களுக்கு கொடுக்கும் சம்பளத்தையும் பெண்களுக்கு கொடுக்கும் சம்பளத்தையும் ஒப்பிட்டு தங்களுக்கு காலை 9.00 மணிமுதல் மாலை 2.38 வரையிலான வேலைக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாக கூறி மாலை 2.38 வரை மட்டும் வேலை செய்துவிட்டு அதற்கு மேல் மைதானத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.