‘தோழர்’ நயன்தாரா’ வைரலாகிய போஸ்டர்….!

‘கொலையுதிர் காலம்’. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி இழிவாக பேசியதற்கு நடிகர்கள், நடிகைகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் நயன்தாராவுக்கு ஆதரவாகவும், ராதாரவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

‘தோழர்.நயன்தாரா’ என்று அச்சடிக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், தற்போது வைரலாகி வருகிறது.