சீமானின் “வந்தேறி” அரசியல் குறித்து தியாகு கண்டனம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழகத்தின் தன கட்சியின் சார்பில் 234 தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார், கடலூர் தொகுதியல் தாமே போட்டி இடுகிறார், தான் ஆட்சிக்கு வந்தால் செய்யக் கூட ஒரு செயல் திட்ட வரையை வெளியிட்டு இருக்கிறார், இவை அனைத்தும் அவர் கட்சியின் அரசியல் உரிமைகள், அதில் தாம் குறுக்கிட விரும்பவில்லை, ஆனா அதே நேரத்தில் தமிழ் சமூகம் குறித்து, தமிழ் சமூகத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து என்னளவுக்கு முரணானவை, தமிழ் தேசிய இயக்க வளர்ச்சிக்கு இடையுறானவை என சுட்டி காட்டுகிற கடமை நமக்குள்ளது!

தமிழ் நாட்டிற்காகவும், தமிழ் ஈழத்திற்காகவும், அளப்பரிய தியாகங்கள் செய்த தலைவர்களை, தமிழ் சமூகத்தை தட்டி எழுப்பிய தலைவர்களை, எந்த விதமான அடிப்படையும் இல்லாமல், வடுகர்கள் என்றும் தெலுங்கர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் அவர் வசை பாடுவது வேதனைக்கு உரியது.

தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கம் தந்தவர் தந்தை பெரியார். அப்படி இருக்கிற போது பெரியாரை மிகச் சாதரணமாக, பார்பனர்கள், பாரதிய ஜனதா கட்சி கூட தூற்ற தயங்குகிற அளவு தூற்றுவதும், தமிழ் நாட்டின் கேடுகள் அனைத்திற்கும் அவரையே காரணமாக காட்டுவதும், ஏற்றுக் கொள்ள முடியாதவை!

அதே போல தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை ராமகிருஷ்ணன், தமிழின மக்களுக்காக எந்த அளவுக்கு தியாகத்தை செய்து இருக்கிறார் என்பது சீமானுக்கே தெரிந்த செய்தி தான், அவர் அழைத்து போய் சீமானை எத்தனையோ மேடையில் பேச வைத்திருக்கிறார், விடுதலை புலிகள் தோழமை கழகம் நடத்தியதை மறக்க முடியாது, புலிகளை ஆதரித்த ஒரே காரணத்திற்காக அவர் தடா சட்டத்தில் ஆண்டு கணக்கிலே அடை பட்டு கிடக்க நேரிட்டது, அதே போல் வைகோ அவர்களின் அரசியலில் நமக்கு மாறு பட்ட கருத்து இருக்கலாம், அதில் எந்த தவறும் இல்லை, எங்கள் இயக்கம் இந்த தேர்தலில் வைகோவையும் ஆதரிக்க வில்லை, சீமானையும் ஆதரிக்க வில்லை.  வைகோவின் அரசியலை சந்தர்ப்பவாத அரசியல் என்று தான் நாங்கள் சொல்கிறோம், அதே நேரத்தில் அவரை வைகோபால் சாமி நாயுடு என சாதி பெயர் சொல்லி திட்டுவதும், அவருடைய ஈழ போராட்டத்திற்கான பங்களிப்பை தூற்றுவதும் மிகவும் கண்டிக்க தக்கவை.

ஒரே ஒரு கேள்வி திரு சீமானிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், தலைவர் பிரபாகரனை அவர் தேசிய தலைவர் என்று போற்றுகிறார், தமிழ் ஈழத்தின் தேசிய தலைவர் பிரபாகரனை நாமும் போற்றுவோம், ஆனால் பிரபாகரன் அவர்கள் ராம கிருஷ்ணனை பற்றி என்ன நினைத்தார், வைகோவை பற்றி என்ன நினைத்தார் என்பதை நினைத்தார் ஆனால், இந்த தலைவர்களை தூற்ற சீமானுக்கு மனம் வராது, ஒரு வேலை பிரபாகரனுக்கு விளக்கம் தெரியவில்லை, தனக்கு தான் தெரியும் என சீமான் சொல்ல வருகிறாரா என தெரியவில்லை. அரசியல் தலைவர்களின் மாறு பட்ட கருத்திற்காக, அவர்கள் பிறப்பை சாடுவதும், அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதையும் ஏற்க கொள்ள முடியாதவை.

மொத்ததில், தமிழ் நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், தெலுங்கு பகுதியில் இருந்து அல்லது வேறு பகுதியில் இருந்து வந்த மக்கள் தமிழ் நாட்டிலையே குடியேறி, தமிழ் நாட்டு வாழ்க்கையோடு இணைந்து, சொந்த மொழியை மறந்து, தமிழ் சமூகத்தோடு ஒன்று கலந்தவர்கள், அவர்களையும் தமிழ் தேசியத்தின் அங்கமாக தான் நாங்கள் மதிக்குறோம், அவர்களை வேற்று இனத்தவராக நாங்கள் கருதவில்லை, அவர்களின் தொண்டு தமிழ் சமுதாயத்துக்காக தான் கிடைத்து இருக்கிறதே தவிர, சீமான் சொல்லக் கூடிய அவர்களுடைய மூதாதையர்கள் சமூகத்திற்கு போய் கிடைத்து விடவில்லை, இதை உண்மைக்கு புறம்பான அவதூறு என தான் சொல்ல வேண்டும், ஆதி தமிழர்கள் என பெருமையோடு அறியப் படுகிற அருந்ததியர்களை கூட அயல் இனத்தவர்கள் என்று சாடுகிற அளவுக்கு இந்த வக்கிர சிந்தனை போய் சேர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அவதூறுகளின் உச்சக் கட்டம்.

சிங்களத் தலைவர்களின் பெயர்களில் இருக்கிற நாயக் என்கிற சொல்லை வைத்து, அவர்களெல்லாம் தெலுங்கு நாயக்கர்கள் என்றும், அந்த நாயக்கர்களும், இந்த நாயக்கர்களும் சேர்ந்து இன அழிப்பை நடத்தி விட்டார்கள் என்றும், சிங்களர்கள் என்கிற முறையிலையே அல்ல, தெலுங்கர்கள் என்கிற முறையில் தான் தமிழ் இன அழிப்பை அவர்கள் செய்தார்கள் என்றும், தமிழ் நாட்டின் தலைவர்கள் விடுதலை புலிகளை ஆதரித்த தலைவர்கள், தெலுங்கர் என்கிற முறையில் இதற்கு உடந்தையாக இருந்து சதி செய்தார்கள் என்றும் சீமான் கூறுவது அபத்தத்தின் சிகரம் என்று தான் சொல்ல வேண்டும்!

நாயக் என்கிற சொல்லின் மூலம் தெரியாததால், சிங்களத் தலைவர்களையும், நாயக் என பெயர் வர கூடியவர்களையும், ஒரிசாவில் பட் நாயக்கையும், தமிழ் நாட்டில் தெலுங்கு நாயுடுகளையும், எல்லோரையும் ஒரே கூட்டத்தில் சேர்த்து, இவர்கள் தான் இன அழிப்புக்கு காரணம் என்கிறார். நாயக் என்ற சொல், சாதிக்கு மட்டும் பயன் படுகிற சொல்லல்ல, ராணுவத்தில் லான்ஸ் நாயக், என்கிற பட்டப் பெயர் உண்டு, இதற்கெல்லாம் அவர்கள் வடுகர்கள் என்பதல்ல காரணம், இதே தமிழ் நாட்டிலையே ஒரு பக்கம் நாயக்கர்களும் உண்டு, ஒரு பக்கம் நாய்க்கர்களும் உண்டு, நாய்க்கர்களுக்கும் தெலுங்குக்கும் தொடர்பில்லை, இப்படி வரம்பு மீறி விளக்கம் கொடுத்து கொண்டே போனால் என்ன நடக்கும் என்பதை சீமான் எண்ணி பார்க்க வேண்டும். மகிந்த ராஜபக்சேவையும் தெலுங்கன் என்கிறார், பண்டார நாயக்காவும் தெலுங்கர் என்கிறார், ஆக சிங்கள தலைவர்களாக இருந்து இன அழிப்பை புரிந்தவர்கள் தெலுங்கர்கள் என சொன்னால், அதனால் தான் தமிழ் நாட்டில் தெலுங்கு தலைவர்கள் மறைமுகமாக சதி செய்து உடந்தை போனார்கள் என ராம கிருஷ்ணனையும் வைகோவையும் குற்றம் சாடுகிறார். விடுதலை புலிகளை ஆதரித்திற்காக பொடா சிறையிலையே 18 மாத காலம் அடை பட்டு கிடந்தவர் வைகோ, அதே போல் தடா சிறையிலே மூன்றாண்டுகள் இருந்தவர் தோழர் கோவை ராம கிருஷ்ணன், இதெல்லாம் கூட சதி திட்டம் தானா, தமிழக மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்காக, தெலுங்கர்கள் சிறையிலே போய் வாடினார்களா என்பதையெல்லாம் சீமான் தான் விளக்க வேண்டும்!

மனிதர்கள் கருத்துக்களின் பாற் உண்மையாக இருந்து அந்த கருத்துக்களுக்காக உழைப்பதை பிழைப்புக்கு அப்பால் மதிக்கும் பண்பாடு நமக்கு வேண்டும், அது சீமானிடம் காணப் பட வில்லை, ஏனென்றால் அது ஒரு ஜனநாயக பண்பு.

பட் நாயக் தெலுங்கன், பண்டார நாயக்கா தெலுங்கன், வைகோ தெலுங்கன், ராம கிருஷ்ணன் தெலுங்கன், இப்படியே போனால், மூக் நாயக் என்கிற பெயர் யாருக்கு உண்டு என்பது சீமானுக்கு தெரியுமா? மூக் நாயக் என்கிற பத்திரிக்கை நடத்தியவர் அம்பேத்கர், அதற்காகவே அவருக்கு மூக் நாயக் என்ற பட்டம் உண்டு, அம்பேத்கரும் வடுகன் தான் என்று சீமான் தவறாக கருதி விட வேண்டாம், மூக் நாயக் என்றால் மூவைகளின் தலைவன் என்று பொருள், அது அவர் நடத்திய பத்திரிக்கையின் பெயர், அவரும் அவ்வாறே அழைக்கப் பட்டார், உரிமை குரல் எழுப்ப முடியாத ஊமைகளுக்கு அவர் தலைவன் என்கிற பொருளிலே அவர் மூக் நாயக் எனப்பட்டார், எனவே பெரிய சமூகவியல் ஆராய்ச்சி யாளனை போல, நாயக் என்கிற சொல் இருக்கிற இடத்திலெல்லாம் வடுகனை தேடி பிடிப்பதென்பது, அறிவுக்கும் அறிவியலுக்கும், ஜனநாயகத்திற்கும், தமிழர் நலனுக்கும் முரணானது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்!

தந்தை பெரியாரை, இதே காரணத்தை சொல்லி, அவரே தனக்கு போட்டுக் கொள்ளாத சாதி பட்டதை சேர்த்து அவரை சாடுவது, அபத்தத்திலும் அபத்தமான ஒன்று, தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கம் தந்தவர் தந்தை பெரியார், தனி தமிழ்நாடுக்காக இறுதி வரை போராடியவர் தந்தை பெரியார், அண்ணா திராவிட நாடு கேட்ட போது, மொழி வழி மாநிலம் அமைக்கப் பட்டத்திற்கு பிறகு, திராவிட நாடு கேட்பது ஒரு மோசடி என சொன்னவர் பெரியார், அவரை போய் தெலுங்கர் என்றும், தமிழனை தெலுங்கனுக்கு அடிமை படுத்த பார்த்தவர் என்றும், தெலுங்கரோடு இணைத்து பேசுவதென்பது அபத்தமானது. தந்தை பெரியாரை ஒரு முறை கன்னடத்தில் பேசுமாறு கேட்ட போது, பேச முயல்கிறேன் என சொல்லி விட்டு, எனக்கு பேச வரவில்லை, தமிழ் மட்டும் தான் தெரியும் என அவரே கூறியதெல்லாம் சீமானுக்கு வெறும் நாடகமாக தெரியுமோ என்னமோ தெரியவில்லை.

இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம், தமிழ் சமூகத்தை ஒரு தேசிய இனமாக ஒன்று பட செய்வதற்கு, சமூக நீதிக்கு எதிராக நிற்க கூடிய, பார்பனர்களை அவர் அங்கிகரிக்க தயாராக இருக்கிறார், தனிப்பட்ட பார்பனர்கள் பரிதிமார் கலைஞர் போன்றவரை, சீனிவாஸ் ராவ் போன்றவர்கள் கன்னட பார்பனர்களாக இருந்தும் கூட இவர்கள் தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் ஆற்றி இருக்கிற பணியை அங்கிகரிக்க வேண்டும் என்று தான் நாங்கள் தமிழ் தேசியர்கள் கருதுகிறோம், ஆனால் ஒரு சாதி வன்மம் என்கிற வகையில் தமிழர்களுக்கு எதிரானவர்கள், சமூக நீதிக்கு எதிரானவர்கள், தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள், எனவே தான் நாம் எதிர்க்க வேண்டிய சக்திகளில், பார்பனர்களையும் நான் சேர்த்துக் கொள்கிறோம், பார்பனர்களையும் அவர்களின் கருத்தியலான பார்பீனியத்தையும் அதே போல் இந்திய மார்வாடி குஜராத்தி சேட்டுகளையும், பெரு முதலாளிகளையும்,தெலுங்கு மன்னர்கள் ஆதிக்கத்தின் போதும், தமிழ் மன்னர்கள் ஆட்சியின் போதும், எல்லாக் காலத்திலும் பார்பனர்கள் அவர்களின் அதிகாரிகளாக, முகவர்களாக செயல் பட்டவர்கள் என்பது தான் வரலாறு. தமிழ் வழி பாட்டு மொழியாக கூடாது, கல்வி மொழியாக கூடாது, ஆட்சி மொழியாக கூடாது என்பதற்கு ஒரு சாதி பெரிய தடையாக இருக்குமானால், அது பார்பனர்கள் என்பதில் ஐயமில்லை! பார்பனர்களை கூட ஒப்புக் கள்ள முன் வருகிற சீமான், தெலுங்கர்களாக மூதாதையர் பிறந்தார்கள் என்கிற காரணத்தினால், தமிழ் இனத்தின் தனி பெரும் தலைவர்களை, ஒப்புக் கொள்ள மறுப்பது, தமிழனதுக்கு எதிராக ஒரு சீர் குலைவு சக்தியுடைய வேலையாக தான் அமையும் என்பதை நாம் நம்புகிறோம்!

திரு சீமான் இத்தனை செய்திகளையும் பிரபாகரனிடம் இருந்து எடுத்துக் காட்டுகிறவர், வைகோ அல்லது கோவை ராம கிருஷ்ணன் அல்லது தந்தை பெரியாரை பற்றி பிரபாகரன் சொன்னதாக ஒரு செய்தியை எடுத்து காட்டட்டும், இவர்களுக்கு எதிராக அவர் பேசி இருப்பதாக எடுத்து காட்ட முடியுமா?
உண்மையில் இவை அனைத்தும் அவருடைய கற்பனையே, பிரபாகரனுக்கு தெரியாதது எல்லாம் தனக்கு தெரியும் என சீமான் கருதி கொள்ள முடியும், ஆனால் அதையே தமிழ் தேசியம் என்கிற பெயரிலே அவர் கடை பிடிப்பதை தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அந்த முறையில் திரு சீமான் தன்னுடைய இந்த திசை திரும்பிய பார்வையை, வக்கிர போக்கை, மாற்றி கொள்ள வேண்டும், அவர் மீண்டும் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும், தமிழ் ஈழத்திற்க்கும் பாடு பட கூடிய, ஒரு ஆற்றலாக வர வேண்டும், இந்த திரிபுகளை கலைய வேண்டும், தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டு வர வேண்டுமென்று தமிழ் தேசிய எதிர் பார்கிறது.

தமிழ் தேசியம் என்றால் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவது தான் என்று கருதுபவர், தந்தை பெரியார் எரித்த இந்திய அரசமைப்பை, அண்ணல் அம்பேத்கர் எரிக்க விரும்பிய அரசமைப்பை ஏற்றுக் கொண்டு அந்த அரசமைப்பின் பெயரில் சத்தியம் செய்து கொடுத்து ஒரு MLA பதவிக்காக அவர் போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார், அதிகரமில்லாத தமிழக அரசுக்கும், அதிகாரமில்லாத தமிழக சட்டப் பேரவைக்கும், போட்டியிடுகிற பொழுதே, யார் தமிழர்கள் என சான்றிதழ் வழங்குகிற பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார், தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டுமென்கிறார், நம்மை பொறுத்த வரை அது வைகோ ஆனாலும் சரி, கலைஞர் கருணாநிதி ஆனாலும் சரி, அறிஞர் அண்ணா வானாலும் சரி, அவர்களோடு நமக்கு கருத்து மாறு பாடு உண்டு, ஆனால் அவர்கள் எல்லோரும் தமிழர்களே என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், தமிழ் சமூகத்தோடு இணைத்தவர்கள், மலையாளியாக பிறந்த எம் ஜி ராமசந்திரன் கூட தமிழ் நாட்டுக்கு தான் அரசியல் தலைவராக விளங்கினார், தமிழக மக்கள் அவரை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அப்படி பார்க்கிற பொழுது, காலம் காலமாக இந்த மண்ணிலே வாழ்ந்து, இந்த மண்ணின் வாழ்க்கையோடு கலந்து விட்டவர்களை, அயலவர்கள் என்று பிரிப்பதை நம்மால் ஏற்க முடியாது, அது ஜனநாயகத்திற்கு புறம்பானது, மனித நேயத்திற்கு புறம்பானது, தமிழ் தேசியத்திற்கும் புறம்பானது. தமிழ் தேசியம் என்பது ரத்தம் சம்மந்த பட்டது அல்ல, உடலியல் கண்ணோட்டம் அல்ல, அது ஒரு அரசியல் சமூகவியல் பார்வை, ஒரு சமூகவியல் கண்ணோட்டத்தில் தான் தேசியம் வரையறுக்கப் பட முடியுமே தவிர உடலியல் கண்ணோட்டத்தில் ஒரு தேசிய இனத்தை வரையறுக்க முடியாது. இன்றைய அமெரிக்க தேசம் என்பது, எத்தனை ஐரோப்பிய தேசிய இனங்களின் கலவை என்பதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள், இப்படி நிறைய நாம் எடுத்துக் காட்டலாம், ஆனால் திரு சீமான் அவர்கள் இவற்றை எல்லாம் ஆற அமர யோசிக்க வேண்டும், தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால் அப்போ இது வரை ஆண்டு இருந்தவர்கள் எல்லாம் யார்? காமராஜரை தமிழன் என்று அவர் ஒப்புக் கொள்கிறார், பெரியார் கூட பச்சை தமிழன் என்று அழைத்தார், காமராஜர் ஆட்சியை போல் அமைய வேண்டுமென்கிறார், இதே காமராஜர் இந்திய தேசியத்தின் உடைய ஒரு முகவராக செயல் பட்டர் என சீமானால் மறுக்க முடியாது, தமிழகத்தின் எல்லைகளை பறி போனதற்கு திராவிட இயக்கத்தின் மீது குற்றம் சாடுகிற சீமான், காமராசர் மீது குற்றம் சாட்ட வேண்டாமா? திராவிட இயக்கமா அப்போது அதிகாரத்தில் இருந்தது, அதிகாரத்தில் இருந்தது டெல்லியில் நேரு, தமிழகத்தில் காமராசர், இவர்கள் தான் தமிழகத்தின் எல்லைகளை விட்டுக் கொடுத்தவர்கள், ஆனால் காமராசரை ஒரு நல்லாட்சி நாயகனாக அவர் பார்கிறார், சில அம்சங்களில் அது சரியானதும் கூட, ஆனால் தமிழ் தேசியத்திற்கும் காமராசருக்கும் என்ன தொடர்பு இருக்க கூடும், மற்றவர்கள் எல்லாம் எப்படி தெலுங்கர்கள் ஆனார்கள், எப்படி அவர்கள் தமிழர்கள் அல்ல என்று ஆனார்கள், பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரியை சீமானுக்கு நான் நினைவு படுத்த வேண்டும்,

தெலுங்கன் நாடார் தான்,
தெலுங்கனுக்கே நன்மை எல்லாம்
செய்வான் என்றாய் சொல்கின்றாய்,
நல்ல கரடி உன் கரடி,

இது பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரி, கர்நாடகத்தில் தரம் சிங்க் என்ற வடநாட்டவர் முதலமைச்சராக இருந்தார், உடனே அவர் காவேரி கர்நாடகம் செய்திருக்கிற ஆக்கிரமப்பை கை விட்டு விட வில்லை, எதை கர்னாடக நலன் என்று கருதினாரோ அதை தான் பாதுகாத்து நின்றார், எனவே பிறப்பல்ல அங்கே தீர்மானிக்கிற சக்தி, தமிழ் நாட்டை பொறுத்த வரையில் தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டுமென்றால், தமிழக அரசு தான் ஆளுகிறதா, இதற்கு தான் ஆட்சி என்கிற பெயரா, சிவகங்கை வேலு நாச்சியார் இருந்த போது, அது ஆட்சியாக இருந்தது, மருது பாண்டியர்கள் ஆட்சி என்பது ஆட்சி, கட்ட பொம்மர்கள் ஆட்சி எனபது ஆட்சி, ஆனால் இங்கே முதலைமச்சர் நடத்துகிற ஆட்சி, ஆட்சி அல்ல, அதனால் தான் இங்கே எந்த தீர்மானம் போட்டாலும் டெல்லியின் அனுமதி இன்றி எதுவுமே நடை பெற முடிவது இல்லை, ஒரு ஏழு பேர் விடுதலையை கூட முதலைமச்சரால் சாத்திய படுத்த முடியவில்லை என்றால் இது என்ன பதவி? இது ஒரு கங்காணி பதவி, டெல்லியின் கங்காணி பதவி! சரி, தமிழ் நாட்டை தமிழரே ஆள வேண்டுமென சொல்லுகிற சீமான், தமிழ்நாட்டை மோடி என்கிற குஜராத்தி ஆள்வதை பற்றி பேசுவார், இந்தியாவில் தமிழ் நாடு இருக்கிற வரைக்கும் ஒரு மோடியோ அவருக்கு முன் ஒரு மன்மோகன் சிங்கோ அல்லது இந்திராவோ, யாரவது ஒருவர் தான் ஆண்டு கொண்டிருப்பார், இவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை, 1947ல் அதிகார கை மாற்றம் நடந்தது முதல் இன்று வரை, தமிழ் நாட்டை டெல்லியில் இருந்து ஆளுகிறவர்கள் அனைவரும் தமிழர் அல்லாதவர், சரி ஒரு தமிழனை பிரதமர் ஆக்கினால் என்ன நடக்கும், அப்போதும் தமிழ் நாட்டை தமிழன் ஆள்வதை போல சீமான் எண்ணலாம், ஆனால் ஒரு ஆந்திரத்தை தமிழன் ஆள்வது எப்படி நியாயம், குஜராத்தை தமிழன் ஆள்வது எப்படி நியாயம், தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டுமென்றால் ஆந்திரத்தை தெலுங்கன் தானே ஆள வேண்டும், அப்படியானால் உண்மையான தமிழ் தேசியம் என்ன சொல்கிறது என்றால், தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டுமென்றால், தமிழ் நாடு இந்தியாவில் இருக்க கூடாது, இந்தியாவில் தமிழ் நாடு இருக்கிற வரைக்கும் தமிழ் நாட்டை தமிழன் ஆள முடியாது, முதலைமச்சர் என்கிற போர்வையில், பிரதமர் என்கிற போர்வையில், தமிழ்நாட்டை தமிழன் ஆண்டதும் இல்லை, ஆளப் போவதுமில்லை! இதில் தமிழ் தேசியம் என்று பேசுகிற சீமான், அடிப்படையான தமிழ் தேசியம் என்பதின் முழக்கங்களில் கூட தெளிவில்லாமல் இருப்பதை தான் காட்டுகிறது! இந்த முழக்கங்களில் மூலம் பொய்க்கால் குதிரைகளை போர் குதிரைகளாக அவர் காட்ட முயற்சிக்குறார், இது வீண் முயற்சி, இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார், வெறும் உணர்ச்சி வய படுதலும், உணர்ச்சி வய படுத்தலும், அறிவு பூர்வமான சிந்தனைக்கு மாற்றாக முடியாது, இவர் நாம் மாற்று, நாம் தமிழரே மாற்று என்று பேசுகிறார், இவர் இந்தியாவுக்கு மாற்றா, இந்திய அதிகாரதிக்கு மாற்றா என்பதை பற்றி எல்லாம் அவர் வாய் திறப்பதே இல்லை, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்கிறார், ஒரு பக்கம் வைகோவும் திராவிட கட்சிகளுக்கு மாற்று பற்றி பேசுகிறார், இவரும் திராவிட கட்சிகளுக்கு மாற்று பற்றி பேசுகிறார், காங்கிரசுக்கு திமுக மாற்று, திமுகவுக்கு காங்கிரஸ் மாற்று, அதிமுக, திமுக வுக்கு மக்கள் நலக் கூட்டணி மாற்றி, இது எல்லாத்துக்கும் சேர்த்து சீமான் மாற்று, ஆனால் இவர்களில் யார் டில்லி ஆதிக்கத்திற்கு மாற்று? இந்திய அரசமைப்புக்கு யார் மாற்று, இந்தியா என்கிற கட்டமைப்புக்கு யார் மாற்று? இந்திய என்கிற கட்டமைப்புள் மாற்றத்தை இந்திய அரசமைப்புக்குள் தேட முடியாது, எனவே இவர்கள் தேடுகிற மாற்று எல்லாமே இந்தியாவுக்கு உட்பட்ட மாற்று தான், தமிழ்நாடு இந்தியாவுக்கு அடிமை பட்டு இருப்பதை, தமிழ் தேசிய இனத்தை, டில்லி அடிமை படுத்தி வைத்திருப்பதை மறைபதற்கு தான் ஜெயலலிதா ஆட்சி, கருணாநிதி ஆட்சி, நாளைக்கு சீமான் ஆட்சி என்றெல்லாம் இவர்கள் பேசிக் கொண்டிருகிறார்கள், உண்மையான ஆட்சி அதிகாரத்தை மறைக்குற இந்த முயற்சியை நாம் உண்மையில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும், இவர் வைத்திருக்கு செயல் திட்ட வரைவு எல்லாம் எதுவுமே தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவை அல்ல, உண்மையில் டில்லியை போராடி பணிய வைக்க வேண்டுமென்றால், அதற்கு தமிழ் நாடு விடுதலைக்காக போராட வேண்டும், தமிழ் நாட்டின் உரிமைகளின் போராட்டத்தின் மூலமாக தான் விடுதலைக்கான போராட்ட அணிவகுப்பை உருவாக்க முடியும், அப்படி எதுவுமில்லாமல், வெறும் ஒட்டு சீட்டை வைத்துக் கொண்டே, மாநில ஆட்சியை பிடிப்போம், நாங்கள் எல்லா வற்றையும் மாற்றி விடுவோம் என்பது பொய்யானது, ஏமாற்றானது.

ஒரே ஒரு கேள்வி இறுதியாக திரு சீமானுக்கு, தலைவர் பிரபாகரன் படத்தை தன படத்தோடு போட்டுக் கொண்டு அவர் வாக்கு கேட்கிறார், மிகவும் வேதனையான செய்தி, ஒரு இறையன்பர் கோவிலுக்கு ஏற்றி இருக்கிற திரு விளக்கில் பீடி பற்ற வைப்பதை போன்ற ஒரு செயல், இப்படி செய்யலாமா?

பிரபாகரனுக்கும் சீமான் இப்போது நடத்தி கொண்டிருக்கும் தேர்தல் போட்டிக்கும் என்ன தொடர்பு? அவன் ஒரு இனத்தின் விடுதலைக்காக போரிட்டவன், அதற்காக மிகப் பெரிய ஈடுகளை செய்தவன், தமிழ் தேசிய இனத்தை கட்டி எழுப்பி, முப்படை கட்டி, சிங்களவனுக்கு இந்தியனுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஒரு மாவீரன் புரட்சி தலைவன், அவருடைய படத்தை தன படத்தோடு போட்டுக் கொண்டு, 234 தொகுதியிலும் பிரபாகரன் படத்தை போட்டு வாக்கு கேட்கிறார்கள், நான் கேட்கிறேன், இதன் விளைவு என்னவாக இருக்கும், பிரபாகரனுக்கும் நீங்கள் நடத்தும் தேர்தல் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? பிரபாகரன் முதலமைச்சர் பதவிக்காகவே போட்டி யிட்டான், வடக்கு மாகானதிற்காகவும், வடக்கு கிழக்கு மாகானதிற்க்கோ சபையில் இடம் பிடிபதற்காகவா தன் வீரர்களை அவர் களத்திலே நிறுத்தினார்? அவரை பொறுத்த வரை முதலமைச்சர் பதவி என்பது விடுதலை ஆகாது என்பதில் தெளிவாக இருந்தார், அது மட்டுமல்ல, விடுதலை பாதையை திசை திருப்பி விட்டு விடும், காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா, பதினோரு ஆண்டு காலம் சிறையிலே இருந்தவர், இந்திரா காந்தி அவரை கூப்பிட்டு, தேர்தலே இல்லாமல் முதலமைச்சர் பதவி வழங்கிய போது அவர் அந்த பதவியை வாங்கிக் கொண்டார், அதனால் அவர் காஷ்மீர் விடுதலையை காட்டிக் கொடுத்தவர் என்று இன்று வரை காஷ்மீர் மக்களால் மதிக்கப் படுகிறார், இதே தமிழ் ஈழத்தில், இந்திய படைக்கு எதிராக, வீரப் போராட்த்தை செய்த அதே கால கட்டத்தில், முதலமைச்சர் தேர்தலில் போட்டியிட்டு வரதராஜ பெருமாள் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவரும் தமிழ் தேசியம் தான் பேசினார், வராத ராஜ பெருமாளின் வழி முதலமைச்சர் பதவியை தேடுகிற வழி, பிரபாகரன் வழி விடுதலைக்கு போராடுகிற வழி, எந்த வழியை சீமான் கடை பிடிக்குறார், நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்!

 

நன்றி: வாசுகி பாஸ்கர்

You may have missed