ராஜ்நாத் சிங் மகனுக்கு தாவூத் இப்ராகிம் பெயரில் மிரட்டல்

லக்னோ:

உத்தரபிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 12 பேரின் செல்போனுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வாட்ஸ் – ஆப்பில் தகவல் வந்தது. பணம் தராவிட்டால் 3 நாட்களுக்குள் குடும்பத்தினரை கொன்று விடுவோம் என்று அதில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த தகவலை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் பழைய கூட்டாளி என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் நொய்டா தொகுதி, எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவருக்கும் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.