லியோனிக்கு கொலைமிரட்டல்!

 

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இன்று காலையில் பழனியில் வாகை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார்.  அதன் பிறகு, தனக்கு, தனது செல்போன் மூலம் ஐநூறுக்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வந்ததாக, திண்டுக்கல் டவுன் டி.எஸ்.பி.யிடம் அவர் புகார் அளித்தார். மிரட்டல் விடுத்தவர்கள் தங்களை பாமகவினர் என்று சொல்லியதாகவும் லியோனி தெரிவித்தார்.

ஏற்கெனவே லியோனிக்கு கொலை மிரட்டல் விடுக்கபப்ட்டதும், லியோனி இறந்துவிட்டதாக வதந்தி பரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.