பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாட பாஜக கடும் எதிர்ப்பு வந்தது. இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த விழா கொண்டாட நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் பரவலாக திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக.வின் 3 எம்எல்ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சரும், பெல்லாரி விஜயநகர பாஜக எம்எல்ஏ ஆனந்த் சிங் பெல்லாரியில் அரசு சார்பில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். சகாப்பூர் எம்எல்ஏ குரு படீல் விழாவில் கலந்தகொள்ளவில்லை.

ஆனால், 18ம் நூற்றாண்டின் ஆட்சியாளரான திப்பு சுல்தானை பாராட்டினார். பெங்களூருவில் பொம்மனஹல்லி எம்எல்ஏ சதீஸ் ரெட்டியின் புகைப்படம் விழா பிளக்ஸ் போர்டுகளின் இடம்பெற்றிருந்தது. ஆனால், இதற்கு தனக்கும் தொடர்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைகளை மீறிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷட்டர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளை சேர்ந்த 3 எம்எல்ஏ.க்கள் இந்த விழாவில் கலந்துகொண்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விழாவின் போது மாநிலத்தின் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.