2022 ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம்: ஒப்பந்தத்தை கைப்பற்ற பிரபல 3 நிறுவனங்கள் போட்டி…

டெல்லி: நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் தகுதியுடைய  3 பிரபல நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து ஒரு நிறுவனம் கட்டிடம்கட்டுவதற்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்தியா சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 2022 -ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்ற கட்டிடம் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு விஸ்டா திட்டத்தின் கீழ் எழுப்ப உள்ள புதிய நடாளுமன்றக் கட்டிடத்துக்கு விருப்பம் தெரிவித்து 7 நிறுவனங்கள் மத்திய அரசிடம் தகுதி, விருப்ப விண்ணபங்களைத் தாக்கல் செய்து நிலையில் அதில் 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம், டாடா ப்ராஜெக்ட் லிமிடெட், ஷபூர்ஜி பலூன்ஜி அன்ட் கோ பிரைவட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான அரசு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.  புதிய நாடாளுமன்ற கட்டிடம் இங்கு பாராளுமன்ற மாளிகை மாநிலத்தின் 118 வது திட்டத்தில் கட்டப்படும். இது மத்திய Vista Re-Development திட்டத்தின் கீழ் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கட்டிடத்தை  உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த போட்டியில் பிரபலமான 7  கட்டிடகலை நிறுவனங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டதாகவும், பின்னர் அவற்றில் இருந்து 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும்,  மத்திய பொதுப்பணித் துறை “சிபிடபிள்யூடி” தெரிவித்துள்ளது.

அதன்படி, லார்சன் அண்ட் டூப்ரோ (எல்அன்டி) , ஷபூர்ஜி பல்லோன்ஜி கம்பெனி பிரைவேட் லிமிடெட் ,  டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகியவை புதிய நாடாளுமன்ற வளாகத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற ஆன்லைன் நிதி ஏலங்களை சமர்ப்பிக்க தகுதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பொதுப்பணித் துறை (CPWD) வெளியிட்டுள்ள தகவலின்படி,    மொத்தம் ஏழு முன் தகுதி டெண்டர்கள் பெறப்பட்டது அவை ஜூலை 14 ம் தேதி திறக்கப்பட்டு, ம் தகுதிக்கான ஆரம்ப நிபந்தனைகளின் படி அவை ஆராயப்பட்டது. ஆவணங்களின்  ஆய்வின் அடிப்படையில், நிதி ஏலங்களை சமர்ப்பிக்கக்கூடிய மூன்று நிறுவனங்களை மத்திய நிறுவனம் தேர்ந்தெடுத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில், பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை கட்டும் ஒப்பந்தத்தை பெற 3 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. இதில் யாருக்கு, வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்கப்போகிறது என்பது விரைவில் தெரிய வரும்.

பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம் இரண்டு மாடி கட்டடமாக இருக்கும். மேலும், இந்தியா சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 2022 -ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது