தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 3 சிஆர்பிஃஎப் வீரர்கள் பலி

காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர்த் தாக்குதலில்  சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் வீரமரணமடைந்தனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள், பாராமுல்லா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகளின் இத்திடீர்த் தாக்குதலில் சிஆர்பிஎஃப் இன் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இருவருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று வீரர்களின் உடலை மீட்டனர். காயம் அடைந்தோரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, தீவிரவாதிகளைத் தேடி வருகிறோம்” எனக் கூறினர்.

இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்ற இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை கடுமையாக கண்டித்தது குறிப்பிடத்தக்கது.