கோவை:

கோவையில் வரும் 6ந்தேதி முதல் 3 நாட்கள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருபபதாக  உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்து உள்ளது.

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) எனும் அமைப்பு, கடந்த 1997-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இணைவதற்கான மாநாட்டினை  நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு 17 வது மாநாடு வரும் ஜூன் 6,7,8 ஆகிய தேதிகளில் கோவையில் உள்ள  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில், அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள், தகவல் தொழில்நுட்பம், திங்ஸ், ரோபாட்டிக்ஸ் மற்றும் 3D தொழில்நுட்பம் போன்ற  தலைப்புகளில் ஆய்வரங்கம் நடைபெற உள்ளது. மேலும், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம்  அமைக்கப்பட உள்ளது.

மேலும், இந்த இணைய மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்து, ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து 160-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசியர்கள், கட்டுரையாளர்கள் பலர் பங்கேற்கின்றனர் என்று உத்தமம் அமைப்பின்  துணைத் தலைவர் மணியம் தெரிவித்து உள்ளார்.