ஸ்தான்புல் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இதில், அதில் பயணம் செய்த  3 பேர் பலியான நிலையில், 177பேர் காயம் காயம் அடைந்தனர். விமான விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

துருக்கியின் மேற்கு மாகாணமான இஸ்தான்புல் நகர ( Sabiha Gokcen International Airport ) விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 ரக விமானம், இஸ்மிர் பகுதிக்கு புறப்பட்டது. விமானம்  விமான ஓடு பாதையில் ,இருந்து மேலே எழும்பியதும், மோசமான வானிலை காரணமாக கீழே சறுக்கி விழுந்தது. இதில், விமானம் 3 துண்டுகளாக உடைந்தது தீ பிடித்தது.

இந்த நிலையில், அதில் விமானம் செய்த பயணிகள்   உடைந்து விழுந்த விமானத்திலிருந்து, கிடைத்த வழிகள் மூலம்  வெளியே குதித்து தப்பினர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. விபத்து காரணமாக அந்த விமான நிலையத்துக்கு வரும் மற்ற விமானங்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள்,  விமான விபத்துக்கு காரணம், கடும் சூறாவளிக் காற்று மற்றும் மழை  என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 179 பேர் காயமடைந்தனர் என்று துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹ்ரேட்டின் தெரிவித்துள்ளார்.