காஷ்மீரில் 3 இடங்களில் நிகழ்ந்த என்கவுன்டரில் 2 போலீஸார் காயம்

ஜம்மு:

காஷமீரில் 3 இடங்களில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 2 போலீஸார் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.


சோப்போர் நகர், பன்டிப்போரா மற்றும் பரமுல்லா மாவட்டத்தில் என்கவுன்டர் நடந்தது. தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பன்டிப்போராவின் ஹாஜின் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மிர் மொஹல்லா பகுதியில் பதுங்கியருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பொதுமக்கள் 2 பேரை கேடயமாக பயன்படுத்தி தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 2 போலீஸார், பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தனர்.