சுஷாந்த் பெயரில் தயாராகும்  மூன்று திரைப்படங்கள்..

பிரபலமானவர்களின் பெயரில், அவர்கள் மரணத்துக்கு பிறகு திரைப்படங்கள் தயாராவது, வழக்கம்.
இந்தியாவை அதிற வைத்த பில்லா, ரங்கா ஆகியோர் பெயரில் ரஜினிகாந்த் படங்களுக்கு பெயர் சூட்டப்பட்டு, நல்ல லாபம் பார்த்தன.

அகால மரணம் அடைந்த நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா ஆகியோர் வாழ்க்கை வரலாறும் படங்களானது.
இந்த வரிசையில் அண்மையில் மும்பையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரில் மூன்று திரைப்படங்கள் தயாராக உள்ளன.

‘ SUSHANT’, ‘SUSHANT SING RAJPUT –BIOGRAPHY’, ‘ THE UNSOLVED MURDER MYSTERY –RAJPUT’’ என்ற பெயரில் மூன்று திரைப்படங்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

-பா.பாரதி.