கொழும்பு

ஸ்டர் பண்டிகை நாளில் இலங்கையில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பை தொடர்ந்து,  தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தடை விதித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நடைபெற்ற தொடர் தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. மேலும், அந்த அமைப்புக்கு இலங்கையில் உள்ள தக்ஹீத் ஜமாத்  உள்பட சில இஸ்லாமிய அமைப்புகள் உதவி செய்ததும் தெரிய வந்தது.

இந்த குண்டுவெடிப்பு விசாரணை பல்வேறு தரப்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவனான ஜகரன் ஹசீம் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், ஜமாதி மிலாது இப்ராகிம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்களும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு உதவி புரிந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்தது.

இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குண்டு வெடிப்பில் ஐஎஸ் இயக்கத்துடன் பங்கு வகித்துள்ளதாக  இலங்கை அரசு தெரிவித்தது

இந்தநிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத், , ஜமாத்தே மில்லதே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி உள்பட 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி தடை விதித்துள்ளார்.