காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்திற்குள் தீவிரவாதிகள் அவ்வப்போது ஊடுருவி அசம்பாவித சம்பவங்களை நிகழ்ச்சி வருகின்றனர். இந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. அப்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இன்று குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை வழியாக தீவரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.

கார்ட்டூன் கேலரி