வரும் 27ந்தேதி முதல் சென்னையில் இருந்து மேலும் மூன்று சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: வரும் 27ந்தேதி முதல் சென்னையில் இருந்து மேலும் மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில்,  ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளைத் தொடர்ந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7ந்தேதி முதல், தமிழக்ததில் சிறப்பு ரயில்களுக்கு அரசு அனுமதி வழங்கியது. அதுபோல மெட்ரோ ரயில்களும் இயக்க அனுமதி வழங்ககப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 27ந்தேதி முதல் சென்னை – திருவனந்தபுரம், சென்னை – மங்களூரு, சென்னை – மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுதாவ அறிவித்து உள்ளது.

செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

 சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருவுக்கு தினசரி இயங்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.