கோவையில் பரிதாபம்: கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

விஷவாயு தாக்குதலில் இறந்தவர்கள்

கோவை.

கோயம்முத்தூர்  ஆர்.எஸ்.புரத்தில் நகைப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது விஷ வாயு தாக்கி 3 பேர பரிதாபமாக இறந்தனர்.

கோவை ஆர்எஸ்புரம் பாதர்ரண்டி வீதியில் பத்மராஜா என்ற தங்க நகைப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் நகைகள் பிரபல நகைக்கடைகள் மற்றும் வெளி மாநில கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு நகைகள் தயாரிக்கும்போது, அதை சுத்தப்படுத்த ரசாயணப் பொருட்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதை தேக்கி வைக்க பூமிக்கடியில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த தொட்டி நிரம்பியதை தொடர்ந்து, அங்குள்ள ரசாயண நீரை வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்து, அதற்காக அதிகாலை 3 மணி அளவில் நகை செய்யும் தொழிலார்கள் மூலம் சுத்தம் செய்த முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று அதிகாலை  நகைப் பட்டறை தொழிலாளர்களான கவுரிசங்கர், ஏழுமலை, சூரியா ஆகியோர் இந்த தொட்டியை சுத்தம் செய்ய முயன்று, அந்த கழிவுநீர் தொட்டியை திறந்து உள்ளே இறங்கியபோது, தொட்டியில் இருந்து வெளியானி விஷவாயு தாக்கியதால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தனர்.

சக தொழிலாளர்கள் அவர்களை உடடினயாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிருஷ்ட வசமாக ஏழுமலை, சூரியா ஆகியோர் வழியிலேயே உயிரிழந்தனர். மூச்சுத் திணறலுடன் இருந்த கவுரி சங்கர் மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக நகைப் பட்டறை உரிமையாளர் ரவிசங்கரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.