சேலம்: தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு  மும்முனை ( 3phase) மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் டெல்டா பாசனத்திற்கு போக , மீதமுள்ள நீர் வேஸ்டாக  கடலில் கலந்து வருகிறது.  இதை தடுத்து, ஏரிகளுக்கு அனுப்பும் வகையில், ரூ.565 கோடியில் 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் செயல்பட்டுத்தப்பட்டு வந்தது.  இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், அதை  முதல்வர் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,

மேட்டூர் அணையின்  உபரிநீரை கால்வாய் மூலம் ஏ ரிகளுக்குக்கு அனுப்பும் இந்த திட்டமானது, முதலில் அணையில் இருந்து வெளியாகும் உபரி நீரானது  திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,  அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி துணை நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் ஏரி துணை நீரேற்று நிலையம், கண்ணந்தேரி ஏரி துணை நீரேற்று நிலையம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வறண்ட ஏரிகளுக்கு அனுப்பப்படும்.

இந்த திட்டத்தால் மேலும்,  4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடையும். இதனால்  நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.  இந்த உபிரி நீர் திட்டத்தால், இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றுவதோடு, விவசாயம், கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேன்மையடையும். மேலும், மக்களின் பொருளாதார நிலை உயரும் என்றார்.

மிக ககுறுகிய காலத்தில் மேட்டூர் உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று பெருமையுடன் பேசிய முதல்வர்,  விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன்,   5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்த அரசு அதிமுக அரசு என்றும் சுட்டிக்காட்டி பேசினார்.