20லட்சம் ஹவாலா பணத்தை சுருட்டிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கடலூர்:

வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணத்தைச் சுருட்டிய தலைமைக் காவலர்கள் 3 பேர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விசயம் 1 ஆண்டுக்கு பிறகு வெளியே தெரிந்ததை தொடர்ந்து காவலர்களை கடலூர் மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன சோதனையின்போது, அந்த வழியாக வாகனம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையை மேற்கொண்ட வேப்பூர் தலைமைக் காவலர் ரவிக்குமார், கம்மாபுரம் தலைமைக் காவலர் செல்வராஜ், சேத்தியாத்தோப்பு தலைமைக் காவலர் அந்தோணிசாமிநாதன் ஆகியோர் ரூ.20 லட்சத்தையும் சுருட்டிக்கொண்டு மீதி 30 லட்சம் ரூபாயை காவல்துறையில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் ஓராண்டுக்கு பிறகு தற்போது அம்பலக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, 20 லட்ச ரூபாயை ஆட்டை போட்ட 3 காவலர்கள் மீது  புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் மூவரும் கூட்டாகச் சேர்ந்து பணத்தை எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மூவரையும் பணியில் இருந்து நீக்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.