ரியாத்

வுதி அரேபிய அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக அந்நாட்டு மன்னரின் சகோதரர் உள்ளிட்ட மூன்று இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டத்து இளவரசர்

மன்னராட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் உள்ள போதிலும் படத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சியைக் கவனித்து வருகிறார்.   இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பெண்களுக்கு பல உரிமைகள்,  பொழுது போக்கு வசதிகள் உள்ளிட்ட பல சுதந்திரங்களை  மக்களுக்கு அளித்துள்ளார்.  இருப்பினும் இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

அரச குடும்பத்துக்குள்ளேயே பல சதிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.   இவ்வாறு மன்னரின் சகோதரர் அகமது பின் அதுல்லஜிஸ் மற்றும் மன்னரின் மருமகன்கள் முகமது பின் நயிப்  மற்றும் நவாஸ் பி நயீப் ஆகியோர் அரசுக்கு எதிராக சதி செய்தாக குற்றம் சாட்டப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சவுதி அரசு அதிகார பூர்வ தகவல்களை வெளியிடவில்லை  ஆயினும் சவுதி பட்டத்து இளவரசர் தனக்கு எதிராக உள்ள அனைவரையும் அடக்கி ஒடுக்குவதால் இந்த நடவடிக்கையும் அதில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ஏற்கனவே பட்டத்து இளவரசர் மீது கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கதாகும்.