கோவையில் 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளி மாணவர்கள் இருவர் கைது, ஒருவர் தலைமறைவு

கோவை: கோவையில் 8ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் பேர் கைது செய்யப்பட்டனர்.

11 வயதான லட்சுமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தை மற்றும் அத்தை ஆகியோருடன் சுந்தராபுரம் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது தாயார் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். லட்சுமி அடிக்கடி தொலைக்காட்சியைக் காண கீழ் தளத்தில் உள்ள உரிமையாளரின் வீட்டிற்குச் சென்றார்.

அவரது மகன் தீபக்(பெயர் மாற்றப்பட்டது). ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர். அவரது பெற்றோரும் வேலை செய்து கொண்டிருந்ததால், அவர்கள் பெரும்பாலும் தீபக்கை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் செல்வர்.

தீபக்கின் தந்தை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் கொடுத்தார். அவருடன் நண்பர் சுரேஷ் என்பவர் அடிக்கடி வந்து போவார். சில நாட்களுக்கு முன்பு லட்சுமி அவரது வீட்டுக்கு டிவி பார்க்க சென்றுள்ளார். அப்போது 2 சிறுவர்களும் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரும் வீடியோவைப் பார்க்க சிறுமியை கட்டாயப்படுத்தினர். அவள் உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி தன் வீட்டிற்கு சென்றாள். பின்னர், சிறுவர்கள் அவளைப் பின்தொடர்ந்து, முதல் மாடியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் தங்களின் பள்ளி மாணவர் நண்பரான விக்ரம் (பெயர் மாற்றப்பட்டது) என்பவரை அழைத்தனர்.

மூவரும் சிறுமியை தங்கள் தொலைபேசிகளில் ஆபாச வீடியோக்களைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தினர். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை யாரிடமும் வெளியிட வேண்டாம் என்று சிறுவர்கள் லட்சுமியை மிரட்டினர்.

சில நாட்களுக்கு முன்பு, லட்சுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது, அவர் ஒரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது பாலியல் பலாத்கார சம்பவம் தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமி அளித்த புகாரின் பேரில், மூன்று மைனர் சிறுவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தீபக் மற்றும் சுரேஷ் இருவரும் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தலைமறைவான அவர்களின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி