தெலங்கானா காங்கிரஸ் கட்சிக்கு 3 செயலாளர்கள் நியமனம்

ஐதராபாத்:

தெலங்கானா காங்கிரஸ் கட்சி செயலாளராக சதீஷ் ஜார்கிஹோலி செயல்பட்டு வந்தார். இவருக்கு பதிலாக தற்போது 3 செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவை சேர்ந்த என்.எஸ்.போஸ் ராஜூ, சலீம் அகமது, கேரளாவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன் ஆகியோரை தெலங்கானா மாநில செயலாலர்களாக நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார்.