காஷ்மீரில் ஊடுறுவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தங்தார் பிரிவு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இத்தகவலை டி.ஜி.பி. வைத் டுவிட்டர் வெளியிட்டுள்ளார்.