சாமி 2 படத்தில் இருந்து விலகல் ஏன் : த்ரிஷா விளக்கம்

சென்னை

டந்த 2003ஆம் ஆண்டு விக்ரம் – த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட படம் சாமி.  இந்தப் படத்தை ஹரி இயக்கி இருந்தார்.  இந்தப் படப் பாடல்களும் மிகவும் பிரபலமாக இருந்தது.  தற்போது ஹரி இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

இரண்டாம் பாகத்தில் விக்ரம்-த்ரிஷா ஆகியோரே நாயகன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்க திட்டம் இடப்பட்டிருந்த படப்பிடிப்பு த்ரிஷாவால் நின்று போய் விட்டது.  திடீரென தான் நடிக்க முடியாது எனக் கூறி விட்டார்.  த்ரிஷாவின் கதாபாத்திரத்துக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லாததால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் அளித்தனர்.  முன்பணம் வாங்கி விட்டு நடிக்க மறுத்ததற்கு விளக்கம் கேட்டு சங்கம் நோட்டிஸ் அனுப்பியது.  த்ரிஷா இதற்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ”எனக்கு கதை பிடிக்காததால் நான் படத்தில் இருந்து விலகுகிறேன்.  இதுவரை ஒரு நாள் கூட நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.  எனவே இப்படத்தில் இருந்து விலக எனக்கு முழு உரிமை உள்ளது.  அட்வான்ஸ் தொகையை நான் திருப்பித் தர தயாராக உள்ளேன்” என கூறி உள்ளார்.   ஆயினும் படக் குழுவினர் த்ரிஷாவிடம் சமரசம் பேசி வருகின்றனர்