96 படத்தை தீபாவளிக்கு சன் டிவி ஒளிபரப்புவது நியாயமில்லை : திரிஷா

சென்னை

தான் நடித்த 96 திரைப்ப்டத்தை தீபாவளிக்கு சன் டிவி திரையிடுவது நியாயமில்லை என திரிஷா தனது டிவிட்டரில் தெரிவ்த்டுள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 என்னும் தமிழ்ப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வெளியாகி தற்போது 5 ஆவது வாரமாக இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் இந்தப் படத்தில் நாயகி திரிஷாவின் நடிப்பை மிகவும் பாராட்டி வருகின்றனர்.

தீபாவளி தினத்தன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக் கொண்டு சமீபத்தில் வெளியான புது திரபடங்களை ஒளிபரப்புவது வழக்கமே ஆகும். அவ்வகையில் சன் டிவி வரும் தீபாவளி தினத்தன்று 96 திரைப்படம் ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது. ஒரு பிரபல திரைப்படம் இவ்வளவு விரைவாக ஒளிபரப்புவது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.

இது குறித்து நடிகை திரிஷா தனது டிவிட்டரில், “96 திரைப்படம் வெளியாகி 5 வாரங்கள் தான் ஆகிறது, இன்னமும் திரையரங்குகள் 80% நிரம்பி விடுகின்றன. இந்நிலையில் இந்த படத்தை இவ்வளவு சீக்கிரம் ஒளிபரப்புவது நியாயமல்ல என எங்கள் 96 படக்குழு கருதுகிறது.

நாங்கள் இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு ஒளிபரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு செய்தால் சன் டிவிக்கு எங்கள் குழு மிகவும் நன்றி உடன் இருக்கும். #96thefilm #Bank96MoviePremierOnSunTV” என பதிந்துள்ளார்.