மும்பை

மூலிகை விதைகள் வாங்குவதாக கூறி பெண்கள் பெயரில் முகநூல் சாட் செய்து ஏமாற்றியதாக இரு நைஜீரியர் உட்பட (ஜார்ஜ் இகே, உகுவேல் பிரைட் ஒன்யேகா, மற்றும் விஷால் சர்மா) மூவர் கைது.

மும்பையை சேர்ந்தவர் ராகுல் என்னும் தொழிலதிபர்.  இவருக்கு முகநூலில் தோழியானார் ஆர்மண்ட் லிண்டா.  இருவரும் அடிக்கடி சாட் செய்வது வழக்கம்.  லிண்டா தான் இங்கிலாந்தில் ஹெல்த் ப்ரோ ஃபார்மசூடிகல் கம்பனி என்னும் நிறுவனத்தில், பர்சேஸ் மேனேஜராக பணி புரிவதாக சொல்லி இருக்கிறார்.   தனது கம்பெனிக்கு ஒரு குறிப்பிட்ட மூலிகை விதைகள் புற்று நோய்க்கான மருந்து தயாரிக்கத் தேவை எனக் கூறியுள்ளார்.

அந்த விதைகள் மும்பையில் ஒரு குறிப்பிட்ட வியாபாரியிடம் மட்டுமே கிடைப்பதாகவும்,  அதை குறந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு தனது நிறுவனத்துக்கு விற்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார்,   வரும் லாபத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்ள முடிவு செய்தனர்.  பிறகு லிண்டா அந்த மூலிகை விற்கும் நிறுவனம் என ஷர்மா டிரேடர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர் என அனிதா ஷர்மா ஆகியோரின் காண்டாக்ட் டீடெயில்ஸ் கொடுத்துள்ளார்.   அனிதாவிடம் ஈ மெயில் மூலம் ராகும் தொடர்பு கொண்டு ஐந்து பாக்கெட் விதைகளுக்கு ரூ 13,04,700 ஷர்மாவின் வங்கிக்கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்தார்.  .விதைகள் வந்து சேர்ந்தன.

இகே, தன்னை மருந்து நிறுவனத்தை சேர்ந்த காஸ்மோஸ் பிரவுன் என்னும் அறிமுகத்துடன் ராகுலின் வீட்டுக்கு வந்து விதைகளை சோதித்தார்.  அவர் ஆலோசனைப்படி ஒரு புதிய நிறுவனத்தை ராகுல் ஆரம்பித்தார்.  ஆனால் நிறுவனத்தை ஆரம்பித்த பின் இகே, தங்களுக்கு குறைந்த 50 பாக்கெட்டுகள் அனுப்பினால் மட்டுமே வாங்கிக் கொள்ளமுடியும் என தெரிவித்தார்.   பிறகு திடீரென அனைவரும் மாயமாகினர்.  தொலைபேசி எண்களும் செயல்பாட்டில் இல்லை.  இதனால் ராகுல் காவல் துறையிடம் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த காவல் துறையினர், வங்கிக்கணக்குக்கு சொந்தமானவரான விஷால் சர்மாவை கைது செய்தனர்.  அவர் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து மற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

காவல்துறையினர் இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என கூறுகிறார்கள்.  மேலும் லிண்டா, அனிதா என்பதும் பொய்ப் பெயர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.  அந்த இரு நைஜீரியர்களின் விசா உண்மையானது தானா என விசாரணை நடைபெற்று வருகிறது