மேற்குவங்கத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம்….அமித்ஷா

கொல்கத்தா:

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்ம் சென்றுள்ளார். அங்கு புரூலியா பகுதியில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில்,‘‘வன்முறை என்பது வங்காளத்தின் கலாசாரம் அல்ல. குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டோபாத்யா உள்ளிட்ட பலர் பிறந்த மாநிலமாகும். மம்தா பானர்ஜி இங்கு வன்முறை கலாசாரத்தை நிறுவியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நடுநிலை மக்களை ஓட்டளிக்க அரசு அனுமதிக்கவில்லை. இங்கு குண்டர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. வெடிகுண்டுகள் தயாரிப்பு இங்கு பெருகி வருகிறது. மணல், நிலக்கரி கொள்ளை அதிகரித்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு பதில் இங்கு குண்டர்களின் வளர்ச்சியே அபாரமாக உள்ளது. இங்கு 2வது பெரிய கட்சியாக பாஜக உருவாகி வருகிறது. விரைவில் பாஜக ஆட்சிக்கு வரும்’’ என்றார்.