இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்க தர்ஷன் நடிப்பில் உருவாகி வந்த ‘தும்பா’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.இப்படத்தின் தர்ஷனுக்கு ஜோடியாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.

சமீபத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ‘புதுசாட்டம்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே மாதம் ரிலீசாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.