புழுதிப் புயல் : உத்திரப் பிரதேசத்தில் 26 பேர் மரணம்

க்னோ

த்திரப் பிரதேச மாநிலத்தில் வீசிய கடுமையான புழுதிப்புயல் மற்றும் மழையில் 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில்  கடுமையான புழுதிப் புயல் வீசியது.   இதனால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.    புழுதிப்புயலுடன் இடி, மின்னல், கனமழையும் ஏற்பட்டது.    பல இடங்களில் இடி தாக்கியதில் வீடு, மரம், மின் கம்பங்கள் விழுந்துள்ளன.   மாநிலத்தில் மொத்தம் 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதில் ஜான்பூர் மற்றும் சுல்தான்பூரில் தலா 5 பேரும், உன்னாவ் பகுதியில், 4 பேரும்.  சந்தாலி மற்றும் பாரைச்சில் தலா மூவரும் ரே பரேலியில் இருவரும்  மிர்ஜாப்பூர், சீதாப்பூர், அமேதி, மற்றும் பிரதாப்கட் டில் தலா ஒருவரும் மரணம் அடைந்துள்ளனர்.   முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது.