தூத்துக்குடி பேரழிவில் உள்ளது : வேதாந்தா நிறுவனம் எச்சரிக்கை

 

தூத்துக்குடி

தூத்துக்குடி நகரம் பேரழிவை நோக்கி உள்ளதாக ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வரும் வேதாந்தா நிறுவனம் எச்சரித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.   அதன்பிறகு அந்த ஆலையில் கந்தக அமிலம் லீக் ஆனதாக தகவல்கள் வந்ததை அடுத்து ஆட்சியர் பார்வை இட்டார்.   அது மிகவும் சிறிய அளவே இருந்ததாகவும் அதை உடனடியாக சரி செய்து விட்டதாகவும் அரசுக்கு ஆட்சியர் தெரிவித்தார்.    இந்நிலையில் அந்த ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளது.

அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையின் பொது மேலாளர் சத்யப்ரியா, “ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழஙக் வேண்டும்.   அத்துடன் அங்குள்ள தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.    அந்த ஆலையை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.  அங்குள்ள அமிலங்கள் நீருடன் கலந்தால் எதிர்விளைவுகள் அபாயகராமாக இருக்கும்.

தற்போது குழாய்களை இணைக்கும் பட்டைகளில் லீக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   அது அமிலம் உள்ள தொட்டியின் உள்ளே இருப்பதால் அமிலம் முழுவதும் வெளியே எடுக்கப்பட வேண்டும்.  அப்போது தான் லீக் முழுமையாக நீக்கப்பட்டதா என்பதை அரிய முடியும்.   அத்துடன் அங்குள்ள பல பொருட்கள் பேரழிவை விளைவிக்கக் கூடியவை ஆகும்.   ஆலை இயங்காமல் உள்ளதால் அவைகளும் லீக் ஆக வாய்ப்புண்டு. அவ்வாறு நடந்தால் தூத்துக்குடிக்கு பேரழிவு ஏற்படும்

இவைகளை எல்லாம் நீக்க வேண்டும் எனில் முழுமையாக ஆலையை கண்காணிக்க வேண்டும்.   அதற்கு மின்சாரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.   சாதாரண காவலர்களுக்கு பதில் ரசாயனம் குறித்து அறிந்த காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.   ” என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.