சீனாவை ஆட்கொண்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை ‘மந்திரங்கள்’ கட்டுப்படுத்தும் என்று என்று புத்தமதத் தலைவர்தலாய் லாமா தெரிவித்து உள்ளார்.

‘ஓம் தரே டுட்டரே ட்ரு சோஹா’ என்கின்ற மந்திரத்தை  தொடர்ந்து உச்சாடனம் செய்தால் கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து விருவிக்கப்படுவார்கள் என்று புதிய தகவலை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன்முதலாக பரவிய கோரோனா வைரஸ்,. தற்போத உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த உயிரிக்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு 106 பேர் பலியான நிலையில், 5ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தங்கியுள்ள திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவிடம் பல புத்தமத துறவிகள், இந்த வைரஸ் தாக்குதலை தடுப்பது குறித்து கருத்து எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள தலாய்லாமா,. கோரோனா  வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், ‘ ‘ஓம் தரே டுட்டரே ட்ரு சோஹா’’ என்கின்ற மந்திரத்தை உச்சரித்து உச்சாடனம் செய்து, மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபட்டுக்கொள்ளலாம் என்றும், இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தார்,  வைரஸ் தாக்குதல் மேலும் பரவுவதை தடுத்து நன்மை தரும் என்று கூறி உள்ளார்.

தலாய்லாமாவின் அறிவுரை புத்தமதத்தினர் ஏற்று மந்திரத்தை உச்சாடனம் செய்து வருவதாகவும், சிலர் இது பொய்யான தகவல், மந்திரங்களால் எப்படி வைரஸ் தொற்றை குணமாக்க முடியும் என்றும் எதிர்கேள்வி எழுப்பி உள்ளனர்.