டிக்டாக் இந்திய பயனாளர்களுக்கு புதிய பாதுகாப்பு வழிமுறை

பிரபலமான டிக்டாக் எனப்படும் மியூசிக்கல் செயலி. தொடக்கத்தில் புதிதாக பாடல்கள் பாட விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், நாளடைவில், பாட்டு என்ற பெயரில் பலதை பதிவேற்றி, அதை துஷ்பிரயோகத்துக்கும், பாலியல் ரீதியான அங்க அசைவுகளுக்குமே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

இதன் காரணமாக, டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று குரல் தமிழக சட்டசபையில் ஒலித்தது. இதையடுத்து தேவையான மாற்றங்களை விரைந்து செயல்படுத்துவதாக டிக்டாக் தெரிவித்தது.

இந்நிலையில்தான்  அமெரிக்கா, சீனா போன்று இந்தியாவிற்கும் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு மையத்திற்கு என்று தனிப்பக்கம் துவக்கப்பட்டு அதில் இந்தியாவில் முக்கிய 10 மொழிகளில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழும் அடக்கம்

இந்த புதிய பாதுகாப்பு வசதியின் மூலம் பயனாளர்கள் தங்கள் கடவுச்சொல், தங்கள் பக்கங்களை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது, தங்கள் காணொளிகளை யார் யாரெல்லாம் பார்க்கமுடியும் மற்றும் எந்த வயதுடையோர் பார்க்கமுடியும் என்றெல்லாம் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன

இது குறித்து ஹெலனா லெர்ச்,  உலகளாவிய பொதுக்கொள்கை இயக்குநர், இந்தியாவில் டிக்டாக் செயலியின் பயன்பாடு அதிகரித்துவருவதால் பயனாளர்களையும் அவர்களின் தகவல்களை பாதுகாப்பது எங்களுடைய முக்கியபணி.

எங்களின் பாதுகாப்பு கொள்கைகளை இந்தியாவின் 10 மொழிகளில் கொடுத்துள்ளதால் அவர்களின் மொழி யிலேயே அவர்கள் எங்களின் பாதுகாப்பு கொள்கைகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் தங்கள் காணொலிகளில் வெறுக்கத்தக்க, ஆபாசமான கருத்துக்களை நீக்கவும் தானாகவே நீக்கும் வசதியையும் உள்ளிணைத்துள்ளது.

தங்கள் பக்கத்தில் ஆபாச வார்த்தை என்ற எவைகளையெல்லாம் நாம் கொடுக்கிறோமோ அந்த வார்த்தைக்களை கொண்டு பயனாளர்கள் மறுமொழியை கொடுக்கும்போது தானாகவே டிக்டாக் செயலி அந்த மறுமொழிகளை நீக்கிவிடும்,

இதுபோன்ற புதிய பாதுகாப்பு வசதிகள் மூலம் டிக்டாக் பயனாளர்கள் பாதுகாப்பாக தங்கள் செயலியை பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்

டிக்டாக்கின் தமிழ் பக்கம்
https://www.tiktok.com/ta/safety

செல்வமுரளி

Leave a Reply

Your email address will not be published.