ஓட்டளிக்க வராதவர்களின் கை, கால்களை கட்டி தூக்கி வாருங்கள்….எடியூரப்பா அதிரடி

பெங்களூர்:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது. பெலகாவியில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பேசுகையில், ‘‘முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோல்வி அடைவார். காங்கிரஸ் மூழ்கி கொண்டிருக்கிறது. எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள்.

ஓட்டு போடாமல் இருப்பவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களின் கை, கால்களை கட்டி தூக்கி வந்து கிட்டூர் தொகுதி பாஜக வேட்பாளர் மகன்தேஷ் டொட்டாகவுடருக்கு வாக்களிக்க செய்ய வேண்டும்’’ என்றார்.