ஜாலிஸ்கோ, மெக்சிகோ

கொரியர் மூலம் உயிருள்ள புலிக்குட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மோப்ப நாய்கள் மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது

மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சில கொரியர் பார்சல்கள் வந்துள்ளன.    அந்நாட்டு வழக்கப் படி பார்சல்களை மோப்ப நாய் மூலம் பரிசோதிப்பது வழக்கம்.    அவ்வாறு பரிசோதிக்கும் போது ஒரு பார்சலைப் பார்த்து மோப்ப நாய் பெரிதும் குறைத்துள்ளது.    ஐயமுற்ற காவல்துறையினர் அந்த பார்சலை பிரித்து பார்த்து அதிர்ந்துள்ளனர்.

எக்ஸ்பிரஸ் மெயில் மூலம் அனுப்பட்டிருந்த அந்த பார்சலின் உள்ளே இருந்த நீல பிளாஸ்டிக் பெட்டியினுள் ஒரு உயிருள்ள புலிக்குட்டி ஒன்று மயங்கிய நிலையில் இருந்துள்ளது.  அந்த பெட்டியினுள் காற்று சென்று வர துளைகள் இடப்பட்டிருந்ததால் அந்தப் புலி உயிருடன் இருந்தது.   மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்ததாலும்,  உணவு மற்றும் குடிநீர் இல்லாததாலும் அந்தக் குட்டி மிகவும் களைப்புடன் இருந்தது.

அந்தப் புலிக்குட்டிக்கு உணவு, குடிநீர் அளித்த காவல்துறையினர் வனத்துறை அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டது.   இந்த புலியின் புகைப்படம் காவல்துறையினரால் வெளியிடப்பட்டு வைரலாகியது.   பலரும் மெக்சிகன் காவல்துறையை பாராட்டும் அதே நேரத்தில் அந்த சின்னஞ் சிறு புலிக்குட்டியை இவ்வாறு அடைத்து அனுப்பியவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக புலிக்குட்டி அனுப்பப் பட்டதைப் பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.