கர்ப்பிணியை கொஞ்சிய புலி!! அதிசய காட்சி

வாஷிங்டன்:

அமெரிக்காவில் இந்தியானா பகுதியை சேர்ந்தவர் பிரிட்டனி ஒஸ்போர்னே. கர்ப்பணியான இவர் தனது உறவினர் நதஷாவுடன் அங்குள்ள வன உயிரியல் பூங்காவுக்கு சென்றார்.

அங்கு கண்ணாடி அறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு புலியை ஒஸ்போர்னே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த புலி கண்ணாடியோடு ஒட்டி நின்று அவருடன் கொஞ்ச தொடங்கியது. தனது கர்ப்பமான வயிற்றை கண்ணாடியோடு ஒட்டி வைத்தபோது, தனது முகத்தை அதோடு ஒட்டி புலி விளையாடியது.

இது குறித்து அந்த பெண் கூறுகையில், ‘‘ நான் கர்ப்பமாக இருப்பதை புலி கண்டுபிடித்துவிட்டது. இதன் காரணமாக தான் அது என்னோடு விளையாட தொடங்கியது. இதை என்னால் மறக்கவே முடியாது. புலி முகத்தை ஒட்டி வைத்து வயிற்றில் உள்ள எனது குழந்தையின் அசைவை கண்டறிந்துள்ளது’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி