பெங்களூரு

ன்னட எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளான 25 பேருக்கு புலனாய்வுத் துறை சிபாரிசின் பேரில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதை ஒட்டி கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    தற்போது முதல்வர் சித்தராமலிங்கையா கன்னட எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட 25 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளார்.   கர்னாடகா புலனாய்வுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கிரீஷ் கர்னாட், பரகூர் ராமசந்திரப்பா, கே எஸ் பகவான், யோகேஷ் மாஸ்டர், பஞ்சகரே ஜெயப்பிரகாஷ், பாடில் புட்டப்பா, சன்னவீரா கனாவி, நடராஜ் ஹுலியார், சந்திரசேகர் பாட்டில் ஆகிய எழுத்தாளர்களும், ஐஏஸ் அதிகாரியும் லிங்காயத்து போராட்ட ஆர்வலருமான எஸ் எம் ஜம்தார் உம் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளோரில் அடங்குவர்.