கமதாபாத்

நேற்று முன் தினம் நடந்த குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

நேற்று முன் தினம் குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.   அகமதாபாத், வடோதரா, சூரத், ராஜ் கோட , ஜாம்நகர், பால் நகர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் நேற்று முன் தினம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இத்துடன் ஜுனாகத் மாநகராட்சியில் இரு இடங்களுக்கான இடைத்தேர்தலும் நடந்தது.  இந்த 6 மாநகராட்சிகள் பல ஆண்டுகளாக பாஜக வசம் உள்ளன.

மொத்தம் 2276 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  வாக்குப்பதிவு முடிவில் சராசரியாக 43% வாக்குகள் பதிவானதாக குஜராத் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.    இந்த வாக்குப்பதிவின் போது எந்த ஒரு பெரிய அசம்பாவித நிகழ்வும் நடக்கவில்லை என தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இன்று பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.  இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  காவல்துறையினர் மாநிலம் எங்கும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   வாக்கு எண்ணும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.