ஹீரோயினாகிறார் டிக்டாக்கில் வைரலான ஐஸ்வர்யா ராய்…..!

--

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் மம்முட்டியுடன் பேசிய காதல் வசனத்தை ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில் இந்த பெண்ணிற்கு தற்போது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையாளத்தில் ஷேய்க் அப்சல் தயாரிப்பில் சுனில் காரியத்துக்கரா இயக்கத்தில் ‘பிக்காசோ’ என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கேரளாவை சேர்ந்த அம்ருதா விளம்பர படங்களிலும், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .