டிக் டாக் ரசிகர்களை தெறிக்கவிட்ட #tiktokdown மற்றும் #tiktokexposed ஹாஷ்-டாக்குகள்

--

டெல்லி :

ந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக செயலி பயன்பாடுகளில் டிக்டாக்-கும் ஒன்றாகும். இருப்பினும், கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு சமூக ஊடக தளத்திலும் டிக்டாக்-கின் மதிப்பீடு பெருமளவு சரிந்துள்ளது. யூடியூப்பில் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவில் “யூடியூப் Vs டிக்டாக்: தி எண்ட்” என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியான பிறகு, பல பயனர்கள், பெரும்பாலும் இந்தியர்கள், டிக்டாக் பயன்பாட்டிற்கு ஒரே ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, கூகிள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கு ஒரே ஒரு நட்சத்திர மதிப்பீடு வழங்கப்படுகிறது, இது அதன் மதிப்பீட்டை 4.6 நட்சத்திரங்களிலிருந்து 2.0 நட்சத்திரங்களாக குறைத்துள்ளது. இருந்தபோதும், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இதன் மதிப்பு இன்னும் 4.8 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

 

பிரபலமான யூடியூபரான கேரி மின்னாட்டி சமீபத்தில் ஒரு வீடியோவை (யூடியூப் Vs டிக்டாக் : தி எண்ட்) வெளியிட்டதிலிருந்து இந்த சரிவு தொடங்கியது, அதில் அவர் டிக்டாக் செயலியை உருவாக்கிய அமர் சித்திக்கி யூடியூபின் உள்ளடக்கத்தை திருடியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது யூடியூபில் இருந்து பின் நீக்கப்பட்டது.

இந்த சம்பவம் டிக்டோக் ரசிகர்களுக்கும் யூடியூப் ரசிகர்களுக்கும் இடையில் ஒரு சமூக ஊடகப் போரை ஏற்படுத்தியது, இது இரு தளங்களுக்கிடையில் விரிசலை உருவாக்கியது.

மின்னாட்டியின் வீடியோ அகற்றப்பட்டதிலிருந்து, யூடியூபரின் ரசிகர்கள் தங்கள் ஆதரவைக் காட்ட சமூக ஊடகங்களில் #JusticeForCarry மற்றும் #BanTikTokInIndia ஆகிய ஹாஷ்-டேக்குகளை ட்ரெண்டிங் செய்தனர். அதே நேரத்தில் #tiktokdown மற்றும் #tiktokexposed தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளன. டிக்டாக்கின் மதிப்பீடுகள் குறைவதற்கு மற்றொரு காரணம், அமர் சித்திகியின் சகோதரர் பைசல் சித்திகி, பெண்கள் மீதான ஆசிட் தாக்குதல்களை நியாயப்படுத்தி வீடியோவை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் ஆகும்.